2021 ஜூன் 16, புதன்கிழமை

தனுன திலகரட்னவின் தாயார் பிணையில் விடுதலை

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் அசோக திலகரட்ன பிணையில் செல்வதற்கு கல்கிசை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

எனினும், தனுன திலகரட்னவின் தாயார் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கல்கிசை நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
 
விசாரணை செய்யும் முகமாக, தனுன திலகரட்னவின் தாயார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டிருந்தார். அத்துடன், நேற்று தனுன திலகரட்னவின் தாயாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

தனுன திலகரட்னவின் தாயார் பல்வேறு வங்கிகளில்  75 மில்லியன் ரூபா பணம் வைப்பில் ஈட்டிருந்தமை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .