2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

பௌத்த மதகுருமார்களுக்கு அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் அச்சுறுத்தல்;ஐ.தே.க குற்றச்சாட்டு

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்த மதகுருமார்களின் விசேட மாநாட்டை  நடத்தக்கூடாது என மஹாநாயக்கர்களை அரசாங்கத்தின் இரண்டு பிரதி அமைச்சர்கள் அச்சுறுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தலதா மாளிகையில் ஏற்படக்கூடிய சனநெரிசல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, மேற்படி மாநாட்டை பிற்போடத் தீர்மானித்திருப்பதாக நேற்று மஹாநாயக்கர்கள் அறிவித்திருந்தனர்.

பௌத்த மதகுரு ஒருவர் உட்பட அரசாங்கத்தின் இரண்டு பிரதி அமைச்சர்கள் மஹாநாயக்கர்களை சந்தித்து  மிரட்டியிருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.(கே.பி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .