Super User / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
 
ஸ்ரீ லங்கா 
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம்   கொழும்பு மாவட்டத்தில் தனித்துப்போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக அக்கட்சியின் அரசியல் அதியுயர்பீட உறுப்பினர் ஒருவர் தமிழ் மிரர் இணையத்தளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.
கொழும்பில் தனித்துப்போட்டியிட்டால் வெற்றி பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு  மத்திய குழு இன்று மாலை கூடவுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமானால் ஒரேயொரு ஆசன ஒதுக்கீடு மாத்திரமே  வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
 
இதேவேளை,ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுவதானால் கொழும்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீனுக்கு பதிலாக முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரான அப்துல் ஹய் போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இது குறித்து மேலதிக தகவல்களைப்பெற தமிழ் மிரர்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் உடன் தொடர்புகொண்ட போதிலும் இதுவரை முடியவில்லை. 
 
46 minute ago
48 minute ago
1 hours ago
Lam Thursday, 18 February 2010 07:38 PM
Rauff Kakeem knows easterner will not allow him to contest there, he knows contesting in tree symbol outside east is a risk operation. so better he will contest in elephant national list
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
48 minute ago
1 hours ago