2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மனோ கணேசன் -ரணில் மோதல்;நாளை இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தை

Super User   / 2010 பெப்ரவரி 18 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன் 

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி,ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுக்கிடையில் கொழும்பு மாவட்ட தமிழ் வேட்பாளர்கள் தொடர்பில் முரண்பாடுகள் உருவாகியுள்ளன.

இருதரப்பினரும் நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளன. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியிலிருந்து தாம் வெளியேறப்போவதாக மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து,அறிக்கை ஒன்றையும் மனோ கணேசனின் கட்சி, எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளது.

தமிழ் வேட்பாளர் நியமனத்தில் அரசியல் வியாபாரிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும்   ஜனநாயக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .