2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஜி.எஸ்.பி;இலங்கையின் பேச்சுவார்த்தை அழைப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

Super User   / 2010 பெப்ரவரி 19 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான இலங்கையின் விருப்பத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்புத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், தென்னாசிய தூதுக்குழுவின் தலைவருமான ஜீன் லம்பேட் எமது இணையதளத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு கூறினார்.

இரு தரப்பினர்களுக்கும் இடையிலான குறுகியகால நெருக்கடியை நீக்குவதற்கு ஜனநாயக விழுமியம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகியன குறித்து கவனம் செலுத்துவதற்கான பரஸ்பர விருப்பம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜீன் லம்பேட் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக மீளப்பெற்றுக்கொள்வதற்கு இந்த வார முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .