2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.கவுடன் ஜே.வி.பி கூட்டணியாக இயங்கியதே இல்லை- சோமவங்ஸ

Super User   / 2010 பெப்ரவரி 20 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் கூட்டு வைத்துக்கொண்டதில்லை என அக்கட்சியின் தலைவர் சோமவங்ஸ அமரசிங்ஹ  டெயிலிமிரர் இணையதளத்துக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சிகள் அனைத்தும் தனித்தனியாகவே ஆதரவை வழங்கின என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குதல்,நீதியும்,சுதந்திரமும் மிக்க தேர்தலை நடத்துதல்,நல்லாட்சியை கொண்டுவருதல் ஆகியன மாத்திரமே உடன்படிக்கையாக விளங்கியது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கூறினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ஜெனரல் பொன்சேகா தலைமையில் புதிய ஜனநாயக முன்னணியில் தமது கட்சி போட்டியிடவுள்ளதாகவும் சோமவங்ஸ அமரசிங்ஹ  தெரிவித்தார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .