2021 ஜூன் 16, புதன்கிழமை

பிள்ளையானின் கட்சி வடக்கில் போட்டி

Super User   / 2010 பெப்ரவரி 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று அறிவித்துள்ளது.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா இதனைக் கூறினார்.

டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் தமது கட்சி நேரடிப் போட்டியில் களமிறங்கிறது எனவும் ஆசாத் மௌலானா தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனு பத்திரத்தை கையளிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். முதற் தடவையாக தமது கட்சி கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் போட்டியிடவிருப்பதாகவும் ஆசாத் மௌலானா சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகு சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .