2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ரவூப் ஹகீம் -ரஜாப்தீன் - அப்துல் ஹை மூவரில் கொழும்புக்கு வருவது யார்?

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம்  எந்த மாவட்டத்தில் போட்டியிடுவார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

கண்டி மாவட்டத்தில் தாம் போட்டிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் ரவூப் ஹகீம்  வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரமுகர் ஒருவர் தமிழ் மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

கண்டியில் போட்டியிடும் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் ரவூப் ஹகீம்   கொழும்பில் போட்டியிடுவார் என நம்பகமாகத்தெரிகிறது.

எனினும்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அம்பாறை அல்லது திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்று அக்கட்சியின் அரசியல் அதி உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன்,முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அப்துல் ஹை  ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.



  Comments - 0

  • kalaam Tuesday, 23 February 2010 04:12 PM

    Dear Hakeem,
    If you win the election you and Mr. Hassen Ali only would continue in the party. others already agreed to jump to UPFA with portfolio. Before the election can you assure who would continue in the party please? I am sure you will not jump to UPFA.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .