2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பிரபாகரனின் உயிரிழப்புக்கான ஆவணம் சமர்ப்பிக்குமாறு இந்தியா கோரிக்கை

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கையிடம், இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்குத் தொடர்பான பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயரை நீக்குவதற்கு மேலதிக ஆவணங்கள் தேவைப்படுவதாக இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

பிரபாகரனின் உயிரிழப்பு குறித்து அண்மையில்  இந்தியாவிடம், இலங்கை  ஆவணமொன்றைக் கையளித்திருந்தது. எனினும், அது பிரபாகரனின் மரணச் சான்றிதழ் அல்லவென இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டிருந்தது. கடந்த மே மாதம் 19ஆம் திகதி பிரபாகரன் நந்திக்கடல் ஏரிக்கு அருகில் கொல்லப்பட்டதாகவும், மரபணுப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும்  அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயரை நீக்குவதற்குவதற்காக இலங்கையின் ஆவணங்கள் இந்திய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .