2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யானைச்சின்னத்தில் போட்டியிட ஜெனரல் பொன்சேகாவுக்கு ரணில் அழைப்பு

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுமாறு ஜெனரல் பொன்சேகாவுக்கும், அவரது பாரியாருக்கும்  ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவை இன்று காலை ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார். இதன்போது, அனோமா பொன்சேகாவிடம், ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கோரியதாக ஐக்கிய தேசியக் கட்சி பொது செயலாளர்  திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

அத்துடன், யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கு ஐக்கிய தேசிய முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

எனினும், ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவரது பாரியார் அனோமா பொன்சேகா, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவர்களிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவிலை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .