2021 ஜூன் 14, திங்கட்கிழமை

பிள்ளையானின் சுவரொட்டிகள் யாழ்.நகரில் கிழிக்கப்படவில்லை-பொலீஸ் ஊடகப்பேச்சாளர்

Super User   / 2010 பெப்ரவரி 23 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் பொலீஸாரினால் கிழிக்கப்படவில்லை என பொலீஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி சற்று முன் தமிழ் மிரர்  இணையதளத்துக்கு தெரிவித்தார்.

இன்று நன்பகல் இரண்டு மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில்  யாழ்.செயலகத்தில் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.அதனைத்தொடர்ந்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் பிள்ளையான் அங்கிருந்து சென்றவுடன் பொலீஸார் வந்து சுவரொட்டிகளை கிழித்தார்கள் என எமக்குக்கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக,பொலீஸ் ஊடகப்பேச்சாளரும்,பொலீஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயகொடியுடன் தமிழ் மிரர் தொடர்புகொண்டது.

சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டது குறித்து இதுவரை எவ்வித முறைப்பாடும் தமக்குக்கிடைக்கவில்லை என்றும் பொலீஸார்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சுவரொட்டிகளைக்கிழிக்கவில்லை என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பொலீஸ் தலைமையக அதிகாரி தமக்குத்தெரிவித்தார் என பிரசாந்த ஜயகொடி மேலும் கூறினார்.

இதுகுறித்து மேலதிக விவரங்களை பெறுவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுடனும் அவரது செயலாளர் ஆஸாத் மௌலானாவுடனும் பலமுறை முயற்சிசெய்தும்  தொடர்பு கொள்ள முடியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .