2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பொன்சேகாவை கண்காணிக்க சர்வதேச பிரநிதிகள் இலங்கை வருகை-அனோமா

Super User   / 2010 பெப்ரவரி 24 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கைக்கு வந்துள்ள சில சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு கவனம் செலுத்தவிருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டதையடுத்து, மனித உரிமைகள் குழு உட்பட ஆறு சர்வதேச அமைப்புகள் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அனோமா பொன்சேகா கூறினார்.

மேற்படி அமைப்புகளின்  பிரதிநிதிகள் இருவர் நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்ததாகவும் அனோமா பொன்சேகா  தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அனோமா பொன்சேகா இன்று சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தககது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .