2021 ஜூன் 16, புதன்கிழமை

ஐக்கிய தேசிய முன்னணியின் அழைப்பை ஜெனரல் பொன்சேகா நிராகரிப்பு

Super User   / 2010 பெப்ரவரி 24 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு  விடுக்கப்பட்ட அழைப்பை ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் ஐக்கிய தேசிய முன்னணி  இன்று கலந்துரையாடியதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு ஜெனரல் சரத் பொன்சேகா, அவரது பாரியார் அனோமா பொன்சேகாவுக்கு நேற்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .