2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

விரைவில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்

Super User   / 2010 பெப்ரவரி 24 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும்  10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மிரர் இணையதளம் ஆர்.சம்பந்தனிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுப் பத்திரம் இன்று காலை 10.15 மணிக்கு திருகோணமலை தேர்தல் செயலகத்தில்  கையளித்திருப்பதாகவும்   ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் எனவும்   அவர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழீழ விடுதலை இயக்கம்,  தமிழ் ஈழப் புரட்சிகர முன்னணி,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய  கட்சிகள் போட்டியிடவிருப்பதாகவும் ஆர்.சம்பந்தன்  தெரிவித்தார். 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறதென தமிழ்மிரர் இணையதளம் ஆர்.சம்பந்தனிடம் கேட்டது. இதற்குப் பதிலளித்த ஆர்.சம்பந்தன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி  தமது பட்டியலில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .