Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பு திருத்தத்திற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்ததுடன் இது தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளது.
இது தொடர்பில் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. எனவே இத்தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியுடன் கட்டாயம் கலந்துரையாடியிருக்க வேண்டும் என்றார்.
இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (ISA)
48 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
6 hours ago
22 Dec 2025