2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நிருபமா ராவை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சந்திக்கும்

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(கெலும் பண்டார)

இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவை தமிழ் கட்சிகளின் அரங்கம் சந்திக்கவுள்ளது.

இலங்கை வரும் நிருபமா ராவ் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை தங்கியிருந்து, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக ஆராயவுள்ளார்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் நிருபமா ராவை சந்தித்து மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிருபமா ராவை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .