2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய நிபந்தனைகள்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பணிப்பெண்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய கொள்கைகளையும் நிபந்தனைகளையும் விதிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடாக இதற்கான அறிவித்தல் விடுக்கப்படும் என  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் எல்.கே.றுஹுனுகே தெரிவித்தார்.

பணிப்பெண்களை நியமிப்பதற்கு முன்பாக இந்த கொள்கைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் மேற்படி நாடுகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய அவர், பணிப் பெண்களின் பாதுகாப்பையும் மத்திய கிழக்கு நாடுகளின் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக சர்வதேச அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்.(DM) 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .