2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

தேசிய மட்ட சிறுவர் கதை போட்டியில் யாழ். பிரதி அதிபர் முதலாமிடம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

கலாசார அலுவல்கள் அமைச்சினால் அரசாங்க ஊழியர்களிடையே நடாத்தப்படும் வருடாந்த இலக்கிய போட்டிகளில் சிறுவர் கதைப்போட்டியில் தேசிய ரீதியில் முதலாமிடத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரதி அதிபரான திருமதி ஏ.குமாரதாசன் பெற்றுள்ளார்.

அத்துடன் இந்த போட்டியின் இரண்டாமிடத்தை, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியையும், பிரபல கவிஞர் செ.குணரத்தினத்தின் புதல்வியுமான வாசுகி குணரத்தினம் பெற்றுள்ளார்.

இப்போட்டியில் மூன்றாமிடமும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கே கிடைத்துள்ளது. இளைஞர் சேவை அதிகாரியான ஓ.கே.குணநாதன் பெற்றுள்ளார். இவருடன் மூன்றாமிடத்தை யாழ்ப்பாணம் பல்கலை கழக தொழில் நுட்ப உத்தியோத்தரான கே.சோமசேகரன் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .