2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சவூதிக்கு பயணம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்திய செனநாயக்க, கிருஷான் ஜீவக்க ஜயருக்)

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதியின் உடம்பினுள் 24 ஆணிகள் உட்செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சவூதி அரேபியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு அந்த நாட்டு அதிகாரிகளுடன்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கலந்துரையாடவுள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதியின் உடம்பினுள் ஆணிகளும் ஊசிகளும் ஏற்றப்பட்டிருந்தன. இதனையடுத்து இலங்கைக்கு திரும்பி வந்த ஆரியவதி, கடந்த வெள்ளிக்கிழமை 3 மணித்தியால சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவரது உடம்பினுள் இருந்த ஆணிகளும் ஊசிகளும் அகற்றப்பட்டன.   தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .