2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

இன்றைய விசாரணைக்கு சரத் பொன்சேகா சமுகமளிக்கவில்லை

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சரத் பொன்சேகா தொடர்பாக விசாரணை நடத்திவரும் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று பிற்பகல் தனது அமர்வை ஆரம்பித்தது.

எனினும் இதில் கலந்துகொள்ளவதற்கு ஏற்ப சரத் பொன்சேகா உடற்திட நிலையில் இல்லை என மருத்துவ அதிகாரியொருவர் இந்நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அதையடுத்து நாளை 2 மணிவரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

சரத் பொன்சேகா  இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .