2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சவூதி அரேபிய உயர்ஸ்த்தானிகருடன் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய உயர்ஸ்த்தானிகர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹுமான் அல் ஜம்மாஸை சந்தித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அவருடன் இலங்கைப் பணிப்பெண் ஆரியவதி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு இதன்போது அமைச்சர் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் தூதுக்குழுவொன்று சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கிங்ஸ்லி ரணவக உட்பட பலர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .