2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

லஞ்சம் வாங்கிய காதி நீதவான் கைது

Editorial   / 2025 ஜூலை 04 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவாகரத்து வழக்கை பெண்ணுக்கு சாதகமாக முடிவெடுக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டபோது, ​​கதுருவெல காதி நீதவான் மற்றும் ஒரு லிகிதர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கதுருவெல காதி நீதிபதி வளாகத்தில் வைத்து, இரண்டு சந்தேக நபர்களையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கதுருவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .