Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
யுத்தத்தால் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு, அகதி முகாம்களில் வாழும் மக்களை விரைவில் மீளக் குடியமர்த்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு இந்திய இல்லத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன்.செல்வராஜா மற்றும் ரி.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களை மீளக் குடியமர்த்தாமல், அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தின் சுவீகரிக்கத் தயாராகவுள்ளனர். இதை ஒருபோது ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக எங்களின் அதிருப்தியை நிருபமா ராவிடம் தெரிவித்தோம்" என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
தற்போது அந்த மக்களுக்கு மீள் குடியேற்றமே அவசர தேவையாக உள்ளது. இதனை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார்.
இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களை மீளக் குடியமர்த்துமாறு இலங்கை அரசிடம் இந்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது இது தொடர்பில் தெரிவித்துள்தாக நிருபமா ராவ் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago