2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக ஜே.வி.பி. துண்டுப்பிரசுரம் விநியோகம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) இன்று கொழும்பின் பல பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.  கொழும்பு, கோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த துண்டுப்பிரசுர விநியோகம் நாட்டின் அனைத்து பாகங்களிலும் விநியோகிக்கப்படவுள்ளதாக மக்கள விடுதலை முன்னணி தெரிவித்தது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரில்வின் சில்வா, அனுர குமார திசாநாயக்க ஆகியோர் உட்பட மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். குடும்ப ஆட்சியை வலியுறுத்தும் ஏகாதிபத்திய ஆட்சி முறைக்கு வழிசமைக்கும் அரசியலமைப்பு முறைமையினை தோற்கடிப்போம் என்ற வாசகங்கள் அந்த துண்டுப் பிரசுரங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், "புதிய அரசியலமைப்பு முறைமை காரணமாக பொதுமக்கள் நன்மையடையும் பட்சத்தில் அது குறித்து ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருக்க வேண்டும் எனவும் ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அரசியலமைப்பு தொடர்பில் இரகசியமாகவே வைத்திருந்த அரசாங்கம், தற்போது அதனை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றது. இது நாட்டின் ஜனநாயகத்துக்கும் பொதுமக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

இந்த அரசியலமைப்பு முறைமையை நடைமுறைப்படுத்துவதால் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு ஏகாதிபத்தியம் நிலைநாட்டப்படும். இது நாட்டுக்கு ஆபத்தினை விளைவிக்கும்.

அதனால், மக்களை ஏமாற்றி பொய்யான முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள இந்த புதிய அரசியலமைப்பு முறைமையினை தோற்கடிப்பதற்காக ஜனநாயகத்தினை விரும்பும் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அந்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  PiX by :- Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .