2021 ஜூன் 14, திங்கட்கிழமை

விசாரணை நடத்தக் கோருகிறது மன்னிப்புச் சபை

Super User   / 2010 செப்டெம்பர் 04 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைப் பணிப்பெண்ணொருவரின் உடலில் சவூதி அரேபிய எஜமானரால் ஆணிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்து வசிhரணை நடத்துமாறு சவூதி அரேபிய அதிகாரிகளை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதி (49) அதிக வேலைப்பளு குறித்து முறையிட்டபோது அவரின் உடலில் 24 ஆணிகள் ஏற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் மூலம் அவரின் உடலிலிருந்து 18 ஆணிகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சவூதி அரேபிய நீதியமைச்சர் ஷேக் கலாநிதி மொஹமட் பின் அப்துல் அஸிஸ் அல் இஸாவுக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் இத் துஷ்பிரயோகத்திற்குப் பொறுப்பானவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட்டு சர்வதேச நியமங்களுக்கு ஏற்பட விசாரணை நடத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

அத்துடன் ஆரியவதி இலங்கைக்குத் திரும்புவதற்கு முன்னர் இக்குற்றச்சாட்டு குறித்து சவூதி அரேபிய பொலிஸார் அல்லது ஏனைய அதிகாரிகளுக்கு அறிவித்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மன்னிப்புச் சபை கூறியுள்ளது.


  Comments - 0

  • xlntgson Tuesday, 07 September 2010 09:10 PM

    சவுதியுடனான நல்லுறவு கெடும் என்பதற்காகவே இதை விசாரிக்கக்கூட போதுமான காரணம் இல்லாத வழக்காக்க நினைக்கின்றனரோ? விசாரித்து இப்பணிப்பெண் பொய் கூறி இருந்தாரேயானால் சட்டம் அவர் மீது திரும்பாமல் இருக்காதே! சௌதி சட்டம் இங்கு போல் அல்ல. குற்றமற்றவராக காணப்பட்டால் எவ்வாறு அவருக்கு நஷ்ட ஈடு கிடைக்குமோ அது போலவே பொய்யான குற்றச்சாட்டை மேற்கொண்டார் என்பதற்கு கசைஅடி & சிறை தண்டனை கிட்டும். இங்கு போல் அல்ல சவுதி சட்டம். இங்கே வழக்கில் வென்றாலும் ஒரு சதமும் கிடைக்காது. வேறு சிவில் வழக்குகளில் கால நேர விரயம் ஆவதை தவிர!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .