2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஊடகவியலாளர் ருவான் விடுவிக்கப்படுவார்; அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ். செல்வநாயகம்)

ஊடகவியலாளர் ருவான் வீரகோன் விடுதலை செய்யப்படுவார் எனவும் அவரின் விடுதலைப் பத்திரங்கள் இரு வாரங்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் எனவும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ரியாஸ் ஹம்ஸா நேற்று உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் ஐ.தே.க. நாடாளுனம்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் செனவிரட்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் உரையாடலுக்கான வாய்ப்பொன்றை ஏற்படுத்திக் கொடுத்ததாக குற்றம் சுமத்தி தன்னை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்ததாக ஊடகவியலாளர் ருவான் வீரகோன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். 10 லட்ச ரூபா நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் சிராணி திலகவர்தன, எஸ்.ஐ.இமாம் ஆகியோரைக்கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதேஅரச சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவத்தார்.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகள் சாலிய பீரிஸும் சாந்த ஜயவர்தனவும் ஆஜராகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .