2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சாரதிகளுக்கு புதிய அறிவுறுத்தல்

Super User   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் பயணம் செய்யும் வாகனங்கள் குறித்த வீதி நிரல்களிலேயே பயணம் செய்ய வேண்டும் என கொழும்பு நகர போக்குவரத்துப் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

நகரில் விபத்துகளையும் போக்குவரத்து நெரிசலையும் குறைப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் புதிய நிகழ்ச்சித் திட்டங்கள் குறிப்பிடத்தக்க காலம் வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதன்பின் அசட்டையாக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான பொலிஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .