2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

காதை கடித்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்மீது கிராமவாசிகள் தாக்குதல்

Super User   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரதியமைச்சர் ஒருவரின் பிரதம பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் மற்றொருவரும் கிராம மக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பதுரெலியவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர், கடை உரிமையாளர் ஒருவரின் காதை கடித்தமையே இதற்கான காரணம்.

மேற்படி பிரதம பாதுகாப்பு உத்தியோகஸ்தர்,  மற்றொரு பாதுகாப்பு உத்தியோகஸ்தருடன் மதுபோதையில் வந்து, கடையொன்றுக்கு முன்னால் சிறுநீர் கழிக்க முற்பட்டதையடுத்து அவருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

கடைக்கு முன்னால் சிறுநீர் கழிக்க வேண்டாம் என கடை உரிமையாளர் கூறியதையடுத்து ஆத்திரமுற்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தர், கடை உரிமையாளரின் காதை கடித்ததுடன் அவரை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை அவதானித்த கிராமவாசிகள் மேற்படி பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கியதுடன் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காயமடைந்த கடை உரிமையாளரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் தற்போது களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .