2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

டெய்லி மிரரைப் பார்வையிடுவதைத் தடுக்க முயற்சி

Super User   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ்மிரரின் சகோதர ஆங்கில இணையத்தளமான டெய்லி மிரர் இணையத்தளத்தை வெளிநாடுகளில் பார்வையிடப்பட முடியாமல் செய்வதற்கு வெளிநாட்டிலுள்ள சக்தியொன்றினால் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீலங்கா ரெலிகொம் அதிகாரிகளின் தகவலின்படி, வெளிநாட்டு வாசகர்கள் டெய்லி மிரர் இணையத்தளத்தைப் பார்வையிட முடியாமல் செய்வதில் அச்சக்திகள் சில மட்டங்களில் வெற்றியையும் ஈட்டின.

இன்று காலை டெய்லி மிரர் முகாமைத்துவத்துடன் தொடர்புகொண்ட ஸ்ரீலங்கா ரெலிகொம் அதிகாரிகள் , இது குறித்து தெரிவித்ததுடன் மேற்படி முயற்சியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .