Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியின் மஹரகம அலுவலகத்தினை நேற்று நள்ளிரவு திடீர் சோதனைக்கு உட்படுத்தியுள்ள பொலிஸார், அங்கிருந்த சுவரொட்டிகள் பலவற்றையும் பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்தது.
மஹரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று கூறிய சிலரே சீருடையில் வந்து, இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி. தெரிவித்தார்.
இதன்போது குறித்த அலுவலகத்திலிருந்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போதும் தனது முயற்சியினால் அது தடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் குறித்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகள் பலவும் பொலிஸாரால் பலவந்தமான முறையில் எடுத்துச் செல்லப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் கூறினார்.
இதுகுறித்து எமது இணையதளம் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடியிடம் வினவிய போது, இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லையென தெரிவித்தார். (Y.P & M.M)
11 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago