2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில ஊடகங்கள் தாம் செய்தி வெளியிடும் முறையை தொடர்ந்து மேற்கொண்டால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் நிலையை அவை எதிர்நோக்க நேரிடும் என பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

ஊடகவியலாளர் இறுதியில் தாம் தூக்கில் தொங்கும் நிலைக்கு தள்ளப்படும் விதமாக செய்திகளை எழுதக்கூடாது எனவும் அவர் கூறினார்.
ஒரு பத்திரிகை தன்னை பற்றிய செய்தி இல்லாவிட்டால் விற்பனையாகாது எனக் கூறிய பிரதியமைச்சர், ஊடகங்கள் தேவையானால் தன்னை திட்டலாம் எனவும் ஆனால், உண்மையை மட்டுமே செய்திகளில் வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.

'என்னைப் பற்றி எழுதுகின்ற, திட்டுகின்ற சிலரை தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியும். அவர்களின் பின்னணி சிறந்ததல்ல' என மேர்வின் சில்வா கூறினார்.

சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவத்தையடுத்து பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மேர்வின் சில்வா நேற்று மீண்டும் அப்பதவியில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Edward Friday, 10 September 2010 11:21 AM

  ஐயோ! ஐயோ! மேர்வின் தமாசு பண்ணுது!

  Reply : 0       0

  xlntgson Saturday, 11 September 2010 09:40 PM

  தூக்கு தண்டனை இலங்கையில் இல்லை அல்லது சட்டமிருந்தாலும் நிறைவேற்றுவதில்லை. அதை தான் அமைச்சர் சொல்லாமல் சொல்கின்றாரோ? இவருடைய கூற்று மறைமுகமான மிரட்டல் என்றால் இவராகவே என்னை அதிகமாக கேலி செய்து எழுதுங்கள், சித்திரம் வரையுங்கள் என்று கேட்பது போல இருக்கிறது. ஜனாதிபதியை மன்னர் என்று கூறி கூறி இவர்தான் மன்னர் போல் பேசுகிறார். துட்டகெமுனு என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் இவர் கோட்டே இராஜதானிக்கு வந்து அப்பாவிகள் மீது அடாவடித்தனம் செய்கிறார். பெலியத்தைக்கு பொய் இவரது வீரத்தை காட்டட்டும், யாப்பாக்களிடம்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .