2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள்

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை  தென்பட்டதானால், நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என  கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

கிண்ணியா பிரதேசத்தில்  தலைப்பிறை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹமீடியா மண்டபத்தில் தற்போது இடம்பெற்றது.

இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பிரதிநிதிகள், ஸாவியாக்கள் மற்றும் தைக்கியாக்க ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .