2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் ஐ.சி.ஆர்.சி. அலுவலகம் மூடப்படுகிறது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தம் முடிவடைந்தபின் ஒருவருடங்களுக்கு மேலான காலத்தில்  மன்னார் மாவட்டத்தில் தனது நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்து  வந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எதிர்வரும் நவம்பர் மாதத்ததுடன் அங்குள்ள தனது அலுவலகத்தை  மூடவுள்ளது.

அதேவேளை, வவுனியாவில் உள்ள அலுவலகம் மூலம், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகளை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் வழங்கிவரும் என அச்சங்கம் அறிவித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களைப் பார்வையிடச் செல்வதற்கான உதவி வழங்கும் திட்டமும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"இறுதிக்கட்ட போர் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அதிலிருந்து மீளத் திரும்பல் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளின் ஆரம்பக்கட்டத்தில் உதவ வேண்டியதன் முக்கியத்துவத்தையும்  கருத்திற்கொண்டு அந்தப் பகுதிகளில் மனிதாபிமான நடவடிக்கைகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது" என இலங்கைக்கான செஞ்சிலுவைச் சங்கத்தலைவர் போல் கெஸ்டெலா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேவைகளையும் வளங்களையும் சமநிலைப்படுத்த வேண்டியுள்ளது. வவுனியாவிலிருந்து மன்னாருக்கு இலகுவாக சென்றுவர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .