2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

புதிய அரசியலமைப்புத் திருத்தங்கள் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துகின்றன: அமெரிக்கா

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இத்திருத்தங்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாக அமெரிக்கா இன்று கூறியுள்ளது.

ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான கட்டுப்பாட்டை நீக்குவதுடன் பொலிஸ், நீதிச்சேவை, தேர்தல் ஆணைக்குழு முதலானவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்புத் திருத்தம் கடந்த  புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

"இத்திருத்தங்கள் சமநிலைத் தன்மையை பலவீனமாக்குவதுடன் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தவதாகவும் உள்ளமை குறித்து அமெரிக்கா கரிசணை கொண்டுள்ளது" என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே. கிராவ்லி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

சுயாதீன நிறுவனங்களை பலப்படுத்துமாறும் வெளிப்படைத்தன்மையையும் தேசிய நல்லிணக்கத்தையும் அதிகரிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை கிராவ்லி கோரியுள்ளார்.
 


  Comments - 0

  • xlntgson Sunday, 12 September 2010 08:36 PM

    இலங்கை சுயாதீனமான நாடா, இல்லையா? அமெரிக்க ஜனநாயகத்தை பற்றி எமக்கு விமர்சிக்க இயலாதா? ஒவ்வொரு மாகாணத்துக்கு ஒவ்வொரு விதமான வாக்கு புள்ளிகள், கடைசியில் பிரபுக்கள் முடிவு செய்வது, இதெல்லாம் என்ன ஜனநாயகமோ?கண்ணாடி மாளிகையில் இருந்து கல்லெறிகின்றார்கள், வல்லரசு என்பதனாலா?அ டிக்கடி யாப்பை மாற்றக்கூடாது என்று சொல்லி இருந்தாலும் பரவாயில்லை! பொன்சேகாவுக்கு ஆதரவாக தேர்தலில் அறிக்கைவிட்டதுக்கு சமம் இது,பின்னர் அவ்வாறு சொல்லவில்லை என்றார்கள்! இதனால் தானோ சர்வாதிகார முஷாரப் கூட மீண்டும் போட்டியிடுவேன் என்கிறார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .