Super User / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.தே.கவில் பிரதிப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த லக்ஷ்மன் செனிவிரட்ன மற்றும் ஏர்ல் குணசேகர ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கியுள்ளதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செனிவிரட்ன, குணசேகர உட்பட 6 ஐ.தே.க. எம்.பிகள் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தரப்புக்கு மாறியமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய நான்கு எம்.பிகள் தொடர்பாக ஐ.தே.க. ஒழுக்காற்றுக் குழு ஆராயும் என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
இதேவேளை கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவற்றை ஒரே நாளில் பூர்த்தியாக்க முடியாது எனவும் ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார்.
இதற்குச் சில காலம் தேவைப்படும் எனக் கூறிய அவர், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
57 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
4 hours ago