2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டக்காரருக்கு உதவியர் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விளம்பரப் பதாகையின் மீதேறி நின்று, தற்கொலை செய்து கொள்ளப் செய்யப்போவதாக மிரட்டி வரும் நபருக்கும் பொலிஸாருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராக செயற்படுவதற்காக அந்த கம்பத்தின் மீதேறிய மற்றொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை முயற்சிக்கு உதவி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நபர் ஏற்கெனவே செல்லிடத் தொலைபேசியொன்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நபருக்கு வழங்கினார். அதன் மூலம் ஆர்ப்பாட்டக்காரர் ஊடகவியலாளர்களுடன் பேசியமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை முதல் விளம்பரப் பதாகையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர் தன்னை 'ரோஹித' என இனங்காட்டியுள்ளார்.

தானும் தனது மனைவியும் பாதுகாப்புத்துறையில் பணியாற்றியதாகவும் தனது சில பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி அல்லது ஏனைய அரசாங்க உயர்மட்டத்தின் எவரேனும் வந்து வாக்குறுதி அளிக்காவிட்டால் தான் தற்கொலைசெய்துகொள்ளப் போவதாக அந்நபர் செய்தியாளர்களிடம் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .