Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜமீலா நஜிமுடீன்)
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக அச்சுறுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்த கருத்து தொடர்பில் திருப்தியில்லை எனத் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதிக்கு முன்னர் சரியான பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கட்சித் தலைமை தொடர்பான பிரச்சினை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதிக்கு சாதகமான கருத்துத் தெரிவிக்காமல் இருப்பின் தங்களது தீர்மானத்தை சபநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற அமர்வுகளில் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக அச்சுறுத்திய 25 ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
செப்டெம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், நாங்கள் சுயாதீனமாக இயங்குவதானால் ஒரு நாள் முன்னதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க இன்று அளித்த விளக்கம் தொடர்பில் எங்களுக்கு திருப்தி இல்லை" எனவும் தயாசிறி ஜயசேகர டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இதேவேளை, கட்சி மறுசீரமைப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனை ஒரு நாளைக்குள் நிறைவு செய்ய முடியாது. கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு சில காலம் எடுக்கும் எனவும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் இன்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தயாசிறி ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், கட்சி மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை ஒரு மாத காலத்திற்கு முன்னரே நிறைவடைந்துள்ள நிலையில் கட்சி மாநாட்டிற்கான திகதி நிர்ணயிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது எனக் கூறினார்.
"கட்சி மாநாட்டை ஜுலையில் நடத்துவதாக கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். பின்னர் ஓகஸ்ட் வரை ஒத்திவைக்கப்பட்டது. இனி எப்போது மாநாடு நடாத்தப்படும் என்பது தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது. இது சிறந்ததல்ல" என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளில் சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் மறுபரீசீலனை செய்யுமாறும் இது தொடர்பில் காலந்தாலோசனை செய்ய முன்வருமாறும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் காமினி ஜெயவிக்கிரம பெரேரா ஆகியோர் இன்று கோரியதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இக்கோரிக்கை, தொடர்பில் ஏனைய 24 நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
xlntgson Wednesday, 15 September 2010 09:40 PM
ஒரு வெறும் கடதாசி துண்டில் ரணில், சஜித், தயாசிறி என்று எம்பி'கள் எழுதிப்பார்த்தால் தெரியுமே யாருக்கு அதிகம் வாய்ப்பு என்று. நான் நினைக்கின்றேன், ஊடகங்கள் இருபத்திஐந்தை பெரிதாக காட்டுகின்றன. அதில் எத்தனை பேர் சஜித்தை ஆதரிக்கின்றனர், எத்தனை பேர் தயாசிறியை என்று தெரியாத வரை ரணிலுக்கு, அவரது தலைமைத்துவத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஆபத்தில்லை என்று உறுதியாக கூறலாம். அரச கட்சியினரின் ஆதரவும் ஐ.தே.க வுக்கு உண்டு. சுயேச்சைகளுக்கு அல்ல. உண்மையான சுயாதீனமான ஒருவரே ஜனாதிபதியோடு எதிர்காலத்தில், மோதவியலும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
8 hours ago