2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ நீதிமன்றில் ஹந்துன்நெத்தி சாட்சியம்

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனநாயக்க)

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று பிரதிவாதியின் சார்பாக சாட்சியமளித்தார்.

அதேவேளை, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலான ஏ.டி.தோராதெனியவை சாட்சியமளிக்க அவுஸ்திரேலியாவில் அழைப்பாணை விடுக்குமாறு பிரதிவாதியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் நீதிமன்றம் இராணுவ நீதிமன்றம் அதை நிராகரித்தது. அவருக்கு ஏற்கெனவே இலங்கையில் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .