2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை : இலங்கைக் கடற்படை

Super User   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்னா பரணமன்ன)

இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் எந்தவொரு வகையான தாக்குதலையும் நடத்தியதில்லை எனவும் முன்கூட்டி திட்டமிடப்பட்ட தாக்குதல் எதையும் பின்பற்ற வேண்டிய அவசியமுமில்லை எனவும் இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் முன்கூட்டி திட்டமிட்ட வகையில் தாக்குதல் எதையும் நடத்தியதில்லை என இந்திய கடற்படையின் உயரதிகாரியான வைஸ் அட்மிரல் கே.என். சுசில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் கப்டன் அதுல சேனாரட்ன கூறுகையில், 'முன்கூட்டி திட்டமிட்ட வகையில் தாக்குதல் எதையும் நடத்தவேண்டிய தேவை இலங்கைக் கடற்படைக்கு இல்லை.

இலங்கை கடற்படையினர் இந்தியாவினதோ வேறு எந்த நாட்டினதோ மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை. தாக்குதல் நடத்தவும் மாட்டார்கள்' என கப்டன் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .