2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

சீன ஜனாதிபதியின் பிரதிநிதி இலங்கை வருகிறார்

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது தவணைக்கால பதவியேற்பு வைபத்தில் சீன ஜனாதிபதியின் பிரதிநிதியாக சாங் குவோய் கலந்துகொள்ளவுள்ளதாக சீன வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் ஹோங் லெய் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருந்தினராக சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியற்குழுவின் பிரதி தவிசாளரான சாங் நவம்பர் 17 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2ஆவது பதிவிக்காலத்திற்கான சத்தியபிரமானம் செய்யவுள்ளார்.

இதேவேளை சீன துறைமுக பொறியில் கம்பனியால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவிலும் சாங் குவேய் கலந்துகொள்ளவுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .