Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் இலங்கை மீனவர்கள் மூவரை தமிழகம், நாகை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் காப்பாற்றியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையை சேர்ந்த மதிவதணன்(வயது 42), விநாயக மூர்த்தி(வயது 55) மற்றும் கணேஷ் (வயது 44) ஆகிய மூன்று இலங்கை மீனவர்களுமே இவ்வாறு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பைபர் படகொன்றின் மூலம் மீன் பிடித்து கொண்டிருந்த இவர்களின் படகு பழுதடைந்த நிலையிலேயே கடும் காற்று காரணமாக படகு திசைமாறி கோடியக்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் இவர்களை கண்ட நாகை மீனவர்கள் வேதாரண்யத்திற்கு அழைத்து வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இம்மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago