Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 மார்ச் 25 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமது கட்சி அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போதும் இதை வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
முஸ்லிம்களின் சுயாட்சியை எஸ்.ஜே.வி. செல்நாயகமும் ஏற்றுக்கொண்டிருந்ததாக மாவை சேனாதிராஜா எம்.பி. கூறினார். வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
வடக்கிலிருந்த இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என அவர் கூறினார். 'அப்பகுதிகளில் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ்வதற்கு தமிழ் மக்கள் தயாராகவுள்ளனர்' என அவர் தெரிவித்தார்.
unmai Friday, 25 March 2011 10:13 PM
தமிழ் முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக.
Reply : 0 0
ilmrizvi Saturday, 26 March 2011 02:10 AM
இந்த ஒற்றுமை என்றுமே நிலைக்க வேண்டும் தமிழ் மொழியால் நாங்கள் ஒன்றுபட்டவர்கள். பிரிவினை வேண்டாம். பேதம் வேண்டாம். அரசியல் வாதிகளால்தான் பிரிவினையும் பேதமும் பேசப்படுகிறது. மக்கள் என்றுமே ஒன்று பட்டவர்கள்தான்.
Reply : 0 0
xlntgson Saturday, 26 March 2011 09:03 PM
சிறுபான்மையாக நீங்கள் உணரும் இடங்களிலாவது ஒற்றுமையாக இருக்கின்றீர்களா, பெரும்பான்மையை பந்தம் பிடிக்கப்பார்க்கின்றீர்களா என்று நெஞ்சில் கை வைத்துக் கேளுங்கள் ஒற்றுமை வரும்! பெரும்பான்மையை சிறுபான்மை எளிதில் சுற்றி வளைத்து சுழித்து விடும் என்று தான் சிறுபான்மை உரிமைகள் இந்தியா போன்ற நாடுகளில் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் நீதி மன்றங்களினால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இன்றேல் குஜராத் போன்ற இடங்களில் நடந்த உயிருடன் எரிப்புகள் நடந்து முடிந்தபின் என்ன செய்வது என்று தெரியாத குழப்பம், நீதிமன்றுக்கே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago