Super User / 2011 மார்ச் 27 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரை தெரிவுசெய்வதற்காக அக்கட்சியின் செயற்குழு இன்று திங்கட்கிழமை மாலை மீண்டும் கூடவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் புதிய பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரின் ஆதரவாளர்களும் இப்பதவியை பெறுவதற்கு விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
அக்கட்சி ஏற்கெனவே தலைவர், இரு பிரதித் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை தெரிவுசெய்துள்ளது. அதேவேளை இரு பிரதித்தலைவர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையால் உதவித் தலைவர் பதவி நீக்கப்பட்டுள்ளது. முன்னர் உதவித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனநாயக்க வகித்து வந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர, முன்னாள் எம்.பி. இம்தியாஸ் பார்கீர் மார்க்கார் ஆகியோர் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட விரும்புவதாக சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'இவர்களில் ஒருவருக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட வேண்டும். தலைவர் பதவிக்குப் போட்டியிடாததன் மூலம், சஜித் பிரேமதாஸ தியாகம் செய்துள்ளார். ஏனைய பதவிகள் அனைத்துக்கும் தலைவரின் ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே எஞ்சியுள்ள பதவிக்கு பிரேமதாஸவுக்கு நெருக்கமான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். கட்சியின் பிரச்சினைகளைத் தீர்த்து ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு அதுதான் சிறந்த வழி' என ஒரு வட்டாரம் தெரிவித்தது.
49 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
50 minute ago
1 hours ago