2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ரிக்கெட் விற்பனை செய்யும் போலி இணையத்தளங்கள் குறித்து எச்சரிக்கை

Super User   / 2011 மார்ச் 29 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான ரிக்கெட்டுகளை சில போலி இணையத்தளங்கள் விற்பனை செய்வதாக கூறிக்கொள்வது குறித்து இணையத்தள பாவனையாளர்களை இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு அணியின் இணைய பாதுகாப்புக்கான தேசிய நிலையம் (SLCERT) எச்சரித்துள்ளது.

இவ்வாறான இணையத்தளங்கள் தொடர்பாக ஏற்கெனவே இரு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக SLCERT அணியின் சிரேஷ்ட தகவல் பொறியியலாளர் ரோஹன பள்ளியகுரு டெய்லிமிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.  வெளிநாடுகளிலிருந்து இந்த இணையத்தளங்கள் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இணையத்தள பாவனையாளர்கள் தமது கடன்அட்டை இலக்கம் உட்பட தனிப்பட்ட விபரங்களை இத்தகைய இணையதத்தளங்களுக்கு வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .