2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

கொம்பனித்தெருவில் வீடுகளை இழந்த மக்களுக்கு தெமட்டகொடையில் வீடுகள்

Menaka Mookandi   / 2011 மார்ச் 29 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த 2010 மே 5ஆம் திகதி கொம்பனித்தெருவில் உடைக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தெமட்டகொடை பகுதியில் வீடுகள் கட்டப்படுவதாக சட்டமா அதிபர் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கட்டப்படும் வீடுகளுக்கு மேலதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடாக பணமும் வழங்கப்பட வேண்டும் என வழக்காளிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்தார் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். குறித்த வழக்கு மே 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0

  • xlntgson Wednesday, 30 March 2011 09:28 PM

    எனது ஒரு பிரார்த்தனை நிறைவேறி இருக்கிறது, இவர்கள் எனது உறவினர்களோ நண்பர்களோ அல்ல என்றாலும் நான் மிக அதிகமாக இவர்களுக்காக கவலைப்பட்டிருக்கின்றேன். இந்த இணையதளம் மூலம் (tamilmirror.lk) நான் வாதாடி இருக்கின்றேன் மாற்று ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள் முக்கியமாக அமைச்சர்கள் பசில், கோட்டாபய- பாதுகாப்புத்துறை செயலர், நகர அபிவிருத்தி அதிகார சபை வீடமைப்பு நீதித்துறை & ஆளுநர், முதலமைச்சர், பதில் முதல்வர் கொழும்பு. இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் நன்றி! எதிர்க்கட்சியை சேர்ந்த சில எம்பிகளும் கூட.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .