2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பொன்சேகாவுக்கு மருத்துவ சோதனை

Super User   / 2011 மார்ச் 30 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாருக் தாஜுதீன்)

முன்னாள் இராணுவத் தளபதி மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரின் சட்டத்தரணி இன்று நீதிமன்றில் கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கு இன்று நீதிபதிகள் தீபாலி விஜேசுந்திர, பி.பீ. வராவெவ, இஸட். ரஸீன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது பொன்சேகா நீதிமன்றில் ஆஜராகவில்லை. அவர் உடல்நலமின்மை காரணமாக வைத்தியசாலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக பொன்சேகாவின் சட்டத்தரணி நளின் லதுவஹெட்டி கூறினார்.

அதையடுத்து ஏப்ரல் முதலாம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .