Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 30 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
கடந்த பெப்ரவரி மாதம் ஆறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமான காப்புறுதி செய்யப்பட்ட 36,000 ஏக்கர் வயல் காணிகளுக்கு இழப்பீடாக விவசாய மற்றும் கமநல சேவைகள் காப்புறுதிசபையால் 85 கோடி 50 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் இழப்பீட்டுத் தொகையை சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் வழங்கவுள்ளதாக விவசாய மற்றும் கமநல சேவைகள் காப்புறுதிசபையின் அதிகாரி பண்டுக்க வீரசிங்க தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கால் அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, பொலன்னறுவை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள வயல் காணிகளே அதிகளவில் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வயல் காணிகளுக்காக ஏக்கர் ஒன்றிற்கு 30,000 ரூபாய் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
01 Jul 2025