2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி; உலக வங்கி கடன்

Menaka Mookandi   / 2011 மார்ச் 31 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தம் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தியை மேற்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 38 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்தே மேற்படி கடனுதவி கோரப்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளரும்  ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'மீள எழுவோம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த அபிவிருத்தி நடவடிக்கையின் கீழ் வீதி அபிவிருத்தி, விவசாயம், குளங்கள் புனரமைப்பு, சிறு வீதிகளின் நிர்மாணம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு, இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. (M.M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .