2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

லங்கா ஈ நியூஸ் செய்தி ஆசிரியர் கைது

Super User   / 2011 மார்ச் 31 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லங்கா ஈ நியூஸ் இணையத்தள த்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலபேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள சந்தேக நபர் ஒருவரின் சகோதரரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலமளிக்க வருமாறு பென்னட் ரூபசிங்கவை வெல்லம்பிட்டிய பொலிஸார் அழைத்திருந்தனர்.

சற்றுமுன்  பென்னட் ரூபசிங்க கைது செய்யப்பட்டதாகவும் அவர் கடுவெல நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் அவரின் சட்டத்தரணி தெரிவித்தார். (SD) Pix By: Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X