2021 ஜூன் 23, புதன்கிழமை

தனியார் துறை ஓய்வூதியம் குறித்து கலந்துரையாட தொழிற்சங்கங்கள் தீர்மானம்

Super User   / 2011 மார்ச் 31 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுஸைன்)

தனியார் துறையினருக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்த தமது நிலைப்பாட்டை அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கு முன்னர், தாம் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தனியார் துறை தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 4 ஆம் திகதி தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை, தொழிற்சங்கங்கள், தொழில்தருநர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இத்தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளளன.

ஜே.வி.பி. தலைமையிலான அனைத்து கம்பனி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இதுதொடர்பாக கூறுகையில்,

'நாம் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. நாம் ஓய்வூதியத் திட்டத்தை விரும்புகிறோம். ஆனால் தற்போதைய திட்டத்திற்கு தொழிலாளர்கள் சாதகமான பதிலளிப்பதை நாம் காணவில்லை. அதனாலேயே கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம்' என்றார்.

சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அன்டன் மார்கஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'இத்திட்டத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

'தனியார் துறையில் சுமார் 15,000 வெற்றிடங்கள் உள்ளபோதிலும் ஊழியர்களை ஈர்க்கக்கூடிய நலதிட்டங்கள் இல்லாததால்  அவ்வெற்றிடங்களை நிரப்ப முடியாதுள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .